• No products in the basket.

7.15 சி.இலக்குவனார்

  • இயற்பெயர் இலட்சுமணன், சாமிசிதம்பரணார் என்பவர் இலக்குவணன் எனப்பெயர் மாற்றினார்.
  • புனைப்பெயர் தொல்காப்பியன் (தொல்காப்பியத்தின் மீது அதிக ஈடுபாட்டின் காரணமாக).
  • தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த வாய்மைமேடு ஊரில் சிங்காரவேலுத் தேவர், இரத்தினம் அம்மாள் அவர்களுக்கு மகனாகப் பிறந்தார்.
  • பிறப்பு 10-03-1910
  • இறப்பு 03-09-1973
  • 1936 தமிழ் வித்துவான் பட்டமும், பி.ஓ.எல், எம்.ஓ.எல், எம்.ஏ பட்டமும் பெற்றார்.
  • 1936–1943 தலைமை ஆசிரியராக பல்வேறு உயர்நிலைப் பள்ளிகளில் பணி.
  • 1945–1965 தமிழ்த் துறைத் தலைவராக தெ.தி.இந்துக் கல்லூரி, விருதை செந்தில் குமாரநாடார் கல்லூரி, மதுரை தியாகராசர் கல்லூரியில் பணி.
  • 1962 தமிழ்ப் பாதுகாப்புக்கழகம் தொடங்கினார், 1965-ல் இந்தி எதிர்ப்புப் போரட்டத்தில் கலந்து சிறை சென்று விடுதலை.
  • 1967-1968 மாநிலக் கல்லூரி தலைமைத் தமிழ்ப் பேராசிரியர்.
  • 1968-1970 உஸ்மானியா பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர்.
  • தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

இவரது நூல்கள்

  • மாணவர் ஆற்றுப்படை
  • அமைச்சர் யார்?
  • எல்லோரும் இந்நாட்டு அரசர்
  • கருமவீரர் காமராசர்
  • தமிழ் கற்பிக்கும் முறை
  • அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து
  • வள்ளுவர் வகுத்த அரசியல்
  • இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்
  • வள்ளுவர் கண்ட இல்லறம்
  • தொல்காப்பிய ஆராய்ச்சி விளக்கம்
  • எழிலரசி
  • பழந்தமிழ்
  • என் வாழ்க்கைப் போர் (சுய வரலாறு)

ஆங்கில நூல்கள்

  • A brief study of Tamil words
  • The Making of Tamil Grammar
 

TNPSC Books

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.