• No products in the basket.

வினா எழுத்துகள் | Samacheer Questions with Answer

பயிலுக

பத்தியில் உள்ள வினாச் சொற்களை எடுத்து எழுதுக.

செழியன் துணிக்கடைக்குச் சென்றான். விற்பனையாளர் ஒருவரிடம் “ஆயத்த ஆடைகள் பகுதி எங்கு உள்ளது?” என்று வினவினான். “யாருக்கு ஆடை வேண்டும்? உனக்கா பெரியவர்களுக்கா?” என்று கேட்டார் விற்பனையாளர். “ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்? சிறுவர்களுக்கான ஆடைகள் இல்லையோ?” என்று வினவினான். “நீ கேட்பது உன் அளவுக்குரிய ஆடைதானே? அதோ அந்தப் பகுதியில் இருக்கிறது” என்றார் விற்பனையாளர்.

விடை: 1. எங்கு?              2. யாருக்கு?       3. ஏன்?                  4. இல்லையோ?               5. ஆடைதானோ?

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது.

  1. என் வீடு ————– உள்ளது. (அது / அங்கே)
  2. தம்பி ————- வா. (இவர் / இங்கே)
  3. நீர் ——————- தேங்கி இருக்கிறது? (அது / எங்கே)
  4. யார் —————- தெரியுமா? (அவர் / யாது)
  5. உன் வீடு ————— அமைந்துள்ளது? (எங்கே / என்ன)

விடை: 1. அங்கே            2. இங்கே             3. எங்கே              4. அவர்                 5. எங்கே

வினா வகையையும் விடை வகையையும் சுட்டுக.

  1. “காமராசர் நகர் எங்கே இருக்கிறது?

“இந்த வழியாகச் செல்லுங்கள்.” – என்று விடையளிப்பது.

  1. “எனக்கு எழுதித் தருகிறாயா?” என்ற வினாவுக்கு, “எனக்கு யார் எழுதித் தருவார்கள்?” என்று விடையளிப்பது.

விடை:  1. காமராசர் நகர் எங்கே இருக்கிறது?                                – அறியாவினா

‘இந்த வழியாகச் செல்லுங்கள் ‘ என்று விடையளிப்பது.             – சுட்டுவிடை

  1. “எனக்கு எழுதித் தருகிறாயா?” என்ற வினாவுக்கு,

“எனக்கு யார் எழுதித் தருவார்கள்?” என்று விடையளிப்பது.

எனக்கு யார் எழுதித்தருவார்கள் என்று விடையளிப்பது.          – வினா எதிர்வினாதல்

உரையாடலில் இடம்பெற்றுள்ள வினாவிடை வகைகளைக் கண்டு எழுதுக.

பாமகள்: வணக்கம் ஆதிரை! ஏதோ எழுதுகிறீர்கள் போலிருக்கிறதே? (அறியா வினா)

ஆதிரை: ஆமாம்! கவியரங்கத்துக்குக் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.)

பாமகள்: அப்படியா! என்ன தலைப்பு? ……….

ஆதிரை: கல்வியில் சிறக்கும் தமிழர்! (). நீங்கள் கவியரங்கத்துக்கு எல்லாம் வருவீர்களோ? மாட்டீர்களோ? ()

பாமகள்: ஏன் வராமல்? (…)

விடை:  பாமகள் : வணக்கம் ஆதிரை! ஏதோ எழுதுகிறீர்கள் போலிருக்கிறதே? (அறியா வினா)

ஆதிரை : ஆமாம்! கவியரங்கத்துக்குக் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன். (நேர் விடை)

பாமகள் : அப்படியா! என்ன தலைப்பு? (அறியா வினா)

ஆதிரை : கல்வியில் சிறக்கும் தமிழர்! (நேர் விடை)

நீங்கள் கவியரங்கத்துக்கு எல்லாம் வருவீர்களா? மாட்டீர்களா? (ஐய வினா)

பாமகள் : ஏன் வராமல்? (வினா எதிர் வினாதல்)

 

TNPSC Books

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.