• No products in the basket.

இனவெழுத்துகள் அறிதல் | Samacheer Questions with Answer

பயிலுக

இப்பாடலில் இடம்பெற்றுள்ள இன எழுத்துச் சொற்களை எடுத்து எழுதுக

தங்கப் பாப்பா வந்தாளே! சிங்கப் பொம்மை தந்தாளே! பஞ்சு போன்ற கையாலே! பண்டம் கொண்டு வந்தாளே! பந்தல் முன்பு நின்றாளே! கம்பம் சுற்றி வந்தாளே!

தென்றல் காற்றும் வந்ததே!

தெவிட்டா இன்பம் தந்ததே!

விடை : தங்க, சிங்க, பஞ்சு, பண்டம், பந்தல், கம்பம், தென்றல், வந்தாளே, நின்றாளே, வந்ததே, தந்ததே.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

  1. மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது?

அ) மஞ்சள்         ஆ) வந்தான்      இ) கல்வி             ஈ) தம்பி

  1. தவறான சொல்லை வட்டமிடுக.

அ) கண்டான்    ஆ) வென்ரான்                 இ) நண்டு           ஈ) வண்டு

விடை : 1. இ)     2. ஆ)

பின்வரும் சொற்களைத் திருத்தி எழுதுக

  1. தெண்றல் 2. கன்டம் 3. நன்ரி                4. மன்டபம்

விடை : 1. தென்றல்       2. கண்டம்          3. நன்றி               4. மண்டபம்

இன எழுத்துகள் அமைந்துள்ள சொற்களை வட்டமிடுங்கள்

  1. கங்கை, பக்கம், வண்டு, மண்டபம், மங்கை,
  2. வெந்தயம், தந்தம், பஞ்சு, பச்சை, தக்காளி, மஞ்சள்,
  3. கம்பளம், குன்று, காக்கை, செங்கடல், தேங்காய்

 

விடை :

  1. கங்கை, பக்கம், வண்டு, மண்டபம், மங்கை
  2. வெந்தயம், தந்தம், பஞ்சு, பச்சை, தக்காளி, மஞ்சள்
  3. கம்பளம், குன்று, காக்கை, செங்கடல், தேங்காய்

கீழ்க்காணும் சொற்களுள் அமைந்துள்ள இன எழுத்துகளை எடுத்து எழுதுங்கள்

  1. சங்கு 2. நுங்கு 3. பிஞ்சு 4. வஞ்சம் 5. பண்டம் 6. சுண்டல் 7. வண்டி 8. பந்தயம் 9. பந்து
  2. கற்கண்டு 11. தென்றல் 12. நன்று

விடை : 1. சங்கு – ங்கு

2. நுங்கு – ங்கு 

3. பிஞ்சு – ஞ்சு  

4. வஞ்சம் – ஞ்ச                 

5. பட்டணம் – ட்ட

6. சுண்டல் – ண்ட

7. வண்டி – ண்டி

8. பந்தயம் – ந்த 

9. பந்து – ந்து

10. கற்கண்டு – ண்டு

11. தென்றல் – ன்ற

12. நன்று – ன்று

கீழ்க்காணும் கட்டங்களில் உள்ள இன எழுத்துச் சொற்களை வட்டமிட்டுத் தனியாக எடுத்து எழுதுக.

 

TNPSC Books

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.